Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View


கட்டுரைகள் / Articles

Print

திருக்குறள்-301-400

Posted on - 16 Oct, 2015

 

 

 

 

 

 

குறள் எண் : 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் à®•à®¾à®•à¯à®•à®¿à®©à¯†à®©à¯ காவாக்கா லென்.
விளக்கம் : மெலியார் இடத்தில் சினம் வராமல் காப்பவனே அருள் காப்பவன். பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
   
குறள் எண் : 302 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் à®‡à®²à¯à®²à®¤à®©à®¿à®©à¯ தீய பிற.
விளக்கம் : வலியவரிடத்தில் சினம் கொள்வது தீமையில் முடியும். மெலியவரிடத்தில் சினம் கொள்வது இம்மையில் பழியும், மறுமையில் பாவமும் பயக்கும்.
   
குறள் எண் : 303 மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய à®ªà®¿à®±à®¤à¯à®¤à®²à¯ அதனான் வரும்.
விளக்கம் : யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் மறந்துவிட வேண்டும். சினத்தால் தீமையான விளைவுகளே ஏற்படும்.
   
குறள் எண் : 304 நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் à®ªà®•à¯ˆà®¯à¯à®®à¯ உளவோ பிற.
விளக்கம் : முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைக் காட்டிலும் வேறு பகை இல்லை.
   
குறள் எண் : 305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் à®¤à®©à¯à®©à¯ˆà®¯à¯‡ கொல்லுஞ் சினம்.
விளக்கம் : ஒருவன் துன்பம் நேராமல் தன்னைக் காத்துக் கொள்ள நினைப்பான் ஆயின் கோபம் வராமல் அதனை அடக்கி ஆள வேண்டும். அங்ஙனம் கோபத்தை அடக்காவிட்டால் அக்கோபம் அவனையே அழித்து விடும்.
   
குறள் எண் : 306 சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் à®à®®à®ªà¯ புணையைச் சுடும்.
விளக்கம் : கோபமாகிய கொடிய நெருப்பு சினமுற்றோரையே அழிப்பதோடு, அவர் வீடுபேறு அடையத்தக்க வழிகளையும் அடைத்துவிடும்.
   
குறள் எண் : 307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு à®¨à®¿à®²à®¤à¯à®¤à®±à¯ˆà®¨à¯à®¤à®¾à®©à¯ கைபிழையா தற்று.
விளக்கம் : தன் வலிமையைக் காட்டுவதற்காகச் சினத்தை ஒரு கருவியாக்க் கொண்டவன் கெடுவது, நிலத்தைக் கையால் அறைந்தவன் துன்பம் அடைவது போல் ஆகும்.
   
குறள் எண் : 308 இணரெரி தோய்வன்ன இன்னா செயினும் à®ªà¯à®£à®°à®¿à®©à¯ வெகுளாமை நன்று.
விளக்கம் : பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் அவன்பால் கோபப்படாமல் இருப்பது நல்லது.
   
குறள் எண் : 309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் à®‰à®³à¯à®³à®¾à®©à¯ வெகுளி யெனின்.
விளக்கம் : ஒருவன் கோபத்தைத் தன் மனத்தில் கொள்ளாதிருந்தால், நினைத்த நன்மைகளையெல்லாம் அவன் விரைந்து பெறுவான்.
   
குறள் எண் : 310 இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் à®¤à¯à®±à®¨à¯à®¤à®¾à®°à¯ துறந்தார் துணை.
விளக்கம் : கோபத்திற்கு இலக்கானவர்கள் உயிர்வாழ்ந்தும் இறந்தவரேயாவர், கோபத்தை வென்றவர்கள் முற்றும் துறந்த முனிவர்களுக்கு ஒப்பாவர்.
   
குறள் எண் : 311 சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா à®šà¯†à®¯à¯à®¯à®¾à®®à¯ˆ மாசற்றார் கோள்.
விளக்கம் : சிறப்பைத் தருகின்ற பெருஞ்செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
   
குறள் எண் : 312 கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா à®šà¯†à®¯à¯à®¯à®¾à®®à¯ˆ மாசற்றார் கோள்.
விளக்கம் : பகையினால் தீங்கு இழைப்பவனுக்கும் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தல், நல்லோர்களின் பண்பாகும்.
   
குறள் எண் : 313 செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் à®‰à®¯à¯à®¯à®¾ விழுமந் தரும்.
விளக்கம் : காரணம் இல்லாமல் தீங்கு இழைப்வர்களுக்கும், பதிலுக்குத் தீங்க செய்யாதிருத்தல் நலம். இல்லையேல் என்றுமே துயரம் தான் கிட்டும்.
   
குறள் எண் : 314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண à®¨à®©à¯à®©à®¯à®žà¯ செய்து விடல்.
விளக்கம் : தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தல் என்பது அத்துன்பம் செய்தவர் தாமே வெட்கப்படுமாறு அவருக்கு நன்மை செய்து, அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுதலேயாகும்.
   
குறள் எண் : 315 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் à®¤à®¨à¯à®¨à¯‹à®¯à¯à®ªà¯‹à®±à¯ போற்றாக் கடை.
விளக்கம் : மற்றோர் உயிர்க்கு உண்டாகும் துன்பத்தை தமக்குற்ற துன்பமாகக் கருதி அதனை நீக்கிக் காக்க முற்படாவிட்டால், ஒருவர் பெற்ற அறிவினால் வரக்கூடிய பயன் உண்டோ?
   
குறள் எண் : 316 இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯ பிறன்கட் செயல்.
விளக்கம் : துன்பம் தருபவை இவை என ஒருவன் தான் உணர்ந்த செயல்களை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
   
குறள் எண் : 317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானம் à®®à®¾à®£à®¾à®šà¯†à®¯à¯ யாமை தலை.
விளக்கம் : எங்கும், எப்போதும், துயரத்தைத் தரும் காரியத்தைச் சிறிதளவும் மனம் அறிந்து செய்யலாகாது. அதுவே சிறந்த அறமாகும்.
   
குறள் எண் : 318 தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ à®®à®©à¯à®©à¯à®¯à®¿à®°à¯à®•à¯ கின்னா செயல்.
விளக்கம் : பிறர் செய்யும் தீங்குகள் தன் உயிர்க்குத் துன்பம் தருவதை அனுபவித்து அறிபவன், பிற உயிர்களுக்குத் தான் துன்பம் செய்வது என்ன காரணத்தாலோ?
   
குறள் எண் : 319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா à®ªà®¿à®±à¯à®ªà®•à®²à¯ தாமே வரும்.
விளக்கம் : ஒரு நாளில் முற்பகலில் ஒருவருக்குத் தீங்கு செய்தால், செய்தவருக்குத் தீங்குகள் அன்று பிற்பகலுக்குள் தாமாகவே வந்து சேரும்.
   
குறள் எண் : 320 நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் à®¨à¯‹à®¯à®¿à®©à¯à®®à¯ˆ வேண்டு பவர்.
விளக்கம் : பிற உயிர்களுக்குத் துன்பம் செய்பவரையே துன்பம் வந்தடையும். ஆதலால் துன்பம் இல்லாமல் வாழ விரும்புபவர், எவ்வுயிர்க்கும் துன்பம் செய்தல் கூடாது.
   
குறள் எண் : 321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் à®ªà®¿à®±à®µà®¿à®©à¯ˆ எல்லாந் தரும்.
விளக்கம் : அறச்செயல் எது என்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே, அவ்வாறு கொல்லுதல் பிற தீவினைகளை எல்லாம் தானே கொண்டு வரும்.
   
குறள் எண் : 322 பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் à®¤à¯Šà®•à¯à®¤à¯à®¤à®µà®±à¯à®±à¯ ளெல்லாம் தலை.
விளக்கம் : கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்து, தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அற நூலோர் தொகுத்து கூறிய அறங்கள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறமாகும்.
   
குறள் எண் : 323 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் à®ªà®¿à®©à¯à®šà®¾à®°à®ªà¯ பொய்யாமை நன்று.
விளக்கம் : ஆராயப் புகின், உயிர்களைக் கொல்லாதிருத்தல் ஒப்பற்ற அறமாகும். உண்மை பேசுவது இரண்டாவது அறமாகக் கருதப்படும்.
   
குறள் எண் : 324 நல்லா றெனப்படுவது யாதெனின் யாதொன்றுங் à®•à¯Šà®²à¯à®²à®¾à®®à¯ˆ சூழும் நெறி.
விளக்கம் : நல்லொழுக்கம் எனப்படுவது யாதெனில், எந்த ஓர் உயிரையும் கொல்லாத ஆற்றலைப் போற்றும் நெறியாகும்.
   
குறள் எண் : 325 நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாம் கொலையஞ்சிக் à®•à¯Šà®²à¯à®²à®¾à®®à¯ˆ சூழ்வான் தலை.
விளக்கம் : கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக்காப்பவன் இல்லறத்தை விட்டுத் துறவறத்தை ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் ஆவான்.
   
குறள் எண் : 326 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் à®šà¯†à®²à¯à®²à®¾ துயிருண்ணுங் கூற்று.
விளக்கம் : கொல்லாமை என்னும் அறவழியில் நிலையாய் வாழும் ஒருவனுடைய வாழ்நாள் மேல் உயிரை உண்ணும் காலனும் (யமன்) செல்லமாட்டான்.
   
குறள் எண் : 327 தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி à®¤à®¿à®©à¯à®‰à®¯à®¿à®°à¯ நீக்கும் வினை.
விளக்கம் : உயிரினங்கள் மூலம் தனக்கு மரண பயம் வந்தாலும், தன்னை காத்துக் கொள்வதற்காக உயிர்களைக் கொல்லலாகாது.
   
குறள் எண் : 328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் à®•à¯Šà®©à¯à®±à®¾à®•à¯à®®à¯ ஆக்கங் கடை.
விளக்கம் : உயிரினங்களைக் கொல்வதால் செல்வம் சேர ஒரு வேளை வாய்ப்பு இருக்கலாம். அவ்வாறு வரும் செல்வத்தை நல்லோர்கள் சிறந்ததாகக் கருத மாட்டார்கள்.
   
குறள் எண் : 329 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் à®ªà¯à®©à¯à®®à¯ˆ தெரிவா ரகத்து.
விளக்கம் : கொலைத் தொழிலை செய்யும் மக்கள், அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் தாழ்ந்த தொழிலினராகவே தோன்றுவர்.
   
குறள் எண் : 330 உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின் à®šà¯†à®²à¯à®²à®¾à®¤à¯à®¤à¯€ வாழ்க்கை யவர்.
விளக்கம் : பிணி, வறுமை, போன்ற துயரத்திற்கு இலக்கானவர்களைக் கண்டு, ‘இவர்கள் முற்பிறவியில் உயிர்களைக் கொன்றிருக்க வேண்டும்‘ என்று அறிஞர் கூறுவர்.
   
குறள் எண் : 331 நில்லாத வற்றை நிலையின என்றுணரும் à®ªà¯à®²à¯à®²à®±à®¿ வாண்மை கடை.
விளக்கம் : நிலையில்லாதவற்றை நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற புல்லறிவாண்மை (அற்ப அறிவு) துறந்தார்க்கு இழிவாகும்.
   
குறள் எண் : 332 கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் à®ªà¯‹à®•à¯à®•à¯à®®à¯ அதுவிளிந் தற்று.
விளக்கம் : பெருஞ் செல்வம் வந்து சேர்தல் கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து கூடுவதைப் போன்றது. அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
   
குறள் எண் : 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் à®…ற்குப ஆங்கே செயல்.
விளக்கம் : செல்வம் நிலைக்காத இயல்பினையுடையது. அத்தகைய செல்வத்தைப் பெற்றால், நிலையான அறங்களை அப்போதே செய்ய வேண்டும்.
   
குறள் எண் : 334 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் à®µà®¾à®³à®¤à¯ உணர்வார்ப் பெறின்.
விளக்கம் : வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்வினைப் பெற்றவர்க்கு,‘ நாள்‘ என்பது ஒரு கால அளவைப் போலத் தன்னைக் காட்டி உயிரின் வாழ்நாளைச் சிறிது சிறிதாக அறுக்கும் வாள் என்பது விளங்கும்.
   
குறள் எண் : 335 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை à®®à¯‡à®±à¯à®šà¯†à®©à¯à®±à¯ செய்யப் படும்.
விளக்கம் : விளக்கம் ;மேல் மூச்சு, நாக்குத் தழுதழுத்தல் போன்ற மரண உபாதைகள் வருவதற்கு முன்னே வேகமாக நற்கதி பெற நல்லறம் செய்ய வேண்டும்.
   
குறள் எண் : 336 நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் à®ªà¯†à®°à¯à®®à¯ˆ உடைத்துஇவ் வுலகு.
விளக்கம் : நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமையாகிய தன்மையை உடையது இவ்வுலகம்.
   
குறள் எண் : 337 ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப à®•à¯‹à®Ÿà®¿à®¯à¯à®®à¯ அல்ல பல.
விளக்கம் : அறிவற்றவர் ஒரு வேளையாவது வாழ்க்கையில் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை. ஆனால் வீணில் எண்ணும் அளவோ ஒரு கோடியும் அல்ல. மிக்க பலவாகும்.
   
குறள் எண் : 338 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே à®‰à®Ÿà®®à¯à®ªà¯Šà®Ÿà¯ உயிரிடை நட்பு.
விளக்கம் : உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டுக்கும் பறவைக்கும் உள்ள தொடர்பு போன்றது. கூட்டைத் தனியே விட்டு விட்டு பறவை எந்த நேரத்திலும் பறந்து போய் விடும்.
   
குறள் எண் : 339 உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி à®µà®¿à®´à®¿à®ªà¯à®ªà®¤à¯ போலும் பிறப்பு.
விளக்கம் : உலகில் மனிதன் இறப்பது தூங்குவதற்கு ஒப்பாகும். மறுபடியும் அவன் பிறவி எடுப்பது என்பது தூங்கி விழித்தெழுந்த நிலையோடு ஒத்திருக்கும்.
   
குறள் எண் : 340 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் à®¤à¯à®šà¯à®šà®¿à®²à¯ இருந்த உயிர்க்கு.
விளக்கம் : நோய்க்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு நிலையாகத் தங்கியிருப்பதற்குரிய வீடு இதுவரையில் அமையவில்லை போலும்.
   
குறள் எண் : 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் à®…தனின் அதனின் இலன்.
விளக்கம் : ஒருவன் எந்தெந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
   
குறள் எண் : 342 வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் à®ˆà®£à¯à®Ÿà®¿à®¯à®±à¯ பால பல.
விளக்கம் : துன்பம் இல்லாத வாழ்க்கையை விரும்பினால், ஆசைகளையெல்லாம் விட்டு விட வேண்டும்.அப்படி விட்டுவிட்ட பின் இவ்வுலகில் அடையக் கூடிய இன்பங்கள் பலவாகும்.
   
குறள் எண் : 343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் à®µà¯‡à®£à¯à®Ÿà®¿à®¯ வெல்லாம் ஒருங்கு.
விளக்கம் : ஐவகைப் புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும். ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட்டு விட வேண்டும்.
   
குறள் எண் : 344 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை à®®à®¯à®²à®¾à®•à¯à®®à¯ மற்றும் பெயர்த்து.
விளக்கம் : தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும். பற்று இருந்தால் மீண்டும மயங்குவதற்கு வழி உண்டாகும்.
   
குறள் எண் : 345 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் à®‰à®±à¯à®±à®¾à®°à¯à®•à¯à®•à¯ உடம்பும் மிகை.
விளக்கம் : பிறவித் துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையானதாகும். ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?
   
குறள் எண் : 346 யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க் à®•à¯à®¯à®°à¯à®¨à¯à®¤ உலகம் புகும்.
விளக்கம் : உடலை ‘யான்‘ எனவும், பொருள்களை ‘எனது‘ எனவும் நினைக்கின்ற மயக்கத்தைப் போக்குகின்றவன் வானோர்க்கும் எட்டாத உயர்ந்த உலகம் போவான்.
   
குறள் எண் : 347 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் à®ªà®±à¯à®±à®¿ விடாஅ தவர்க்கு.
விளக்கம் : "யான்", "எனது" என்னும் இருவகைப் பற்றுக்களையும் விடாதவரை, துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.
   
குறள் எண் : 348 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி à®µà®²à¯ˆà®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà®¾à®°à¯ மற்றை யவர்.
விளக்கம் : முற்றும் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர்; அவ்வாறு துறக்காத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர் ஆவர்.
   
குறள் எண் : 349 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று à®¨à®¿à®²à¯ˆà®¯à®¾à®®à¯ˆ காணப் படும்.
விளக்கம் : இருவகைப் பற்றும் அற்றபொழுதே, அந்தப் பற்றற்ற நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும். இல்லையானால் பிறவித் துன்பம் மாறி மாறி வரும்.
   
குறள் எண் : 350 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் à®ªà®±à¯à®±à¯à®• பற்று விடற்கு.
விளக்கம் : பற்று இல்லாதவனாகிய இறைவனது பற்றை மட்டுமே பற்றுக. உலகப் பற்றுக்களை விடுவதற்கு அப்பற்றைப் பற்ற வேண்டும்
   
குறள் எண் : 351 பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் à®®à®°à¯à®³à®¾à®©à®¾à®®à¯ மாணாப் பிறப்பு.
விளக்கம் : மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால், சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும்.
   
குறள் எண் : 352 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி à®®à®¾à®šà®±à¯ காட்சி யவர்க்கு.
விளக்கம் : மயக்கம் நீங்கக் குற்றமற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு அவ்வுணர்வு அறியாமையை நீக்கி, இன்பத்தைக் கொடுக்கும்.
   
குறள் எண் : 353 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் à®µà®¾à®©à®®à¯ நணிய துடைத்து.
விளக்கம் : ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு, அடைந்துள்ள இவ்வுலகைவிட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
   
குறள் எண் : 354 ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே à®®à¯†à®¯à¯à®¯à¯à®£à®°à¯ வில்லா தவர்க்கு.
விளக்கம் : மெய்யுணர்வு இல்லாதவர்க்கு, ஐம்புலன்களின் உணர்வுகளையெல்லாம் முழுமையாகப் பெற்றுள்ள போதிலும் பயன் இல்லை.
   
குறள் எண் : 355 எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் à®®à¯†à®¯à¯à®ªà¯à®ªà¯Šà®°à¯à®³à¯ காண்ப தறிவு.
விளக்கம் : எப்பொருள் எத்தன்மையதாகத் தோன்றினாலும், அத்தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல் அப்பொருள் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும்.
   
குறள் எண் : 356 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் à®®à®±à¯à®±à¯€à®£à¯à®Ÿà¯ வாரா நெறி.
விளக்கம் : கற்க வேண்டியவற்றைக் கற்று மெய்க் பொருளையும் அறிந்தவர் மீண்டும் இப்பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்.
   
குறள் எண் : 357 ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் à®ªà¯‡à®°à¯à®¤à¯à®¤à¯à®³à¯à®³ வேண்டாப் பிறப்பு.
விளக்கம் : கேட்ட பொருளை ஆராய்ந்து உண்மை அறிந்தவனுக்கு மறுபிறவி உண்டென்று ஒரு பொழுதும் எண்ண வேண்டாம்.
   
குறள் எண் : 358 பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் à®šà¯†à®®à¯à®ªà¯Šà®°à¯à®³à¯ காண்ப தறிவு.
விளக்கம் : பிறவித் துயரைத் தரும் அஞ்ஞானம் அகல, முத்தி என்னும் சிறந்த நிலைக்கு காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு ஆகும்.
   
குறள் எண் : 359 சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் à®šà®¾à®°à¯à®¤à®°à®¾ சார்தரு நோய்.
விளக்கம் : எல்லாபொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, ஆசைகள் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்கு உரிய துன்பங்கள் மீண்டும் வரமாட்டா.
   
குறள் எண் : 360 காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் à®¨à®¾à®®à®™à¯ கெடக்கெடு நோய்.
விளக்கம் : விருப்பு, வெறுப்பு, அறியாமை, ஆகிய இக்குற்றங்கள் மூன்றனுடைய பாதிப்பு இல்லாமல் ஒழுகினால் துன்பங்கள் வாராமல் கெடும். ( ஒழிந்து நீங்கும் )
   
குறள் எண் : 361 அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் à®¤à®µà®¾à®…ப் பிறப்பீனும் வித்து.
விளக்கம் : எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்ற வித்து, அவா என்று கூறுவர்.
   
குறள் எண் : 362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது à®µà¯‡à®£à¯à®Ÿà®¾à®®à¯ˆ வேண்ட வரும்.
விளக்கம் : ஒருவன் ஏதாவது ஒன்றை விரும்புவதானால் பிறவாமையை விரும்ப வேண்டும். அது ஆசை அற்ற நிலையை (விரும்பாமை) விரும்பினால் தான் உண்டாகும்.
   
குறள் எண் : 363 வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை à®†à®£à¯à®Ÿà¯à®®à¯ அஃதொப்ப தில்.
விளக்கம் : ஆசையின்மைக்குச் சமமான சிறந்த பொருள் இவ்வுலகில் இல்லை. மறு உலகிலும் அதற்குச் சமமானதொரு பொருளைக் காண்பதரிது.
   
குறள் எண் : 364 தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது à®µà®¾à®…ய்மை வேண்ட வரும்.
விளக்கம் : தூய்மையான நிலையென்பது அவா இல்லாத நிலையாகும். அந்நிலை வாய்மையை விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்.
   
குறள் எண் : 365 அற்றவ ரென்பார் அவாஅற்றார் மற்றையார் à®…ற்றாக அற்ற திலர்.
விளக்கம் : எதிலும் பற்றில்லாதவர்கள் பிறவியற்றவர்களாவர். ஆசைக்கு அடிமையானவர்களுக்குப் பிறவியிலிருந்து விடுதலை இல்லை.
   
குறள் எண் : 366 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை à®µà®žà¯à®šà®¿à®ªà¯à®ª தோரும் அவா.
விளக்கம் : ஒருவன் அவாவிற்கு (ஆசைக்கு) அஞ்சி வாழ்பதே அறம். ஏனெனில் ஒருவனைச் சோர்வுகண்டு கெடுத்து வஞ்சிப்பது ஆசையே.
   
குறள் எண் : 367 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை à®¤à®¾à®©à¯à®µà¯‡à®£à¯à®Ÿà¯ மாற்றான் வரும்.
விளக்கம் : ஒருவன் ஆசையை முற்றும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்குரிய நல்வினைகள் தான் விரும்பியவாறே வரும்.
   
குறள் எண் : 368 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் à®¤à®µà®¾à®…து மேன்மேல் வரும்.
விளக்கம் : அவா இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. அவா இருந்தால் துன்பமும் விடாமல் வந்து கொண்டே இருக்கும்.
   
குறள் எண் : 369 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் à®¤à¯à®©à¯à®ªà®¤à¯à®¤à¯à®³à¯ துன்பங் கெடின்.
விளக்கம் : துன்பங்களுள் கொடிய ஆசையென்னும் துயரத்தை விட்டொழித்தால், நிலையான இன்பத்தைப் பெறலாம்.
   
குறள் எண் : 370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே à®ªà¯‡à®°à®¾ இயற்கை தரும்.
விளக்கம் : ஒரு போதும் நிரம்பாத இயல்புடைய அவாவைக் கைவிட்டால், அப்போதே அழிவில்லாத மாறாத இன்பவாழ்வைப் பெறலாம்.
   
குறள் எண் : 371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் à®ªà¯‹à®•à¯‚ழால் தோன்று மடி.
விளக்கம் : செல்வம் வருவதற்குத் தேவையான விதி வரும்போது, முயற்சி தானாக உண்டாகும். அது அழிய வேண்டிய நேரம் வருமாயின் சோம்பல் வளரும்.
   
குறள் எண் : 372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் à®†à®•à®²à¯‚ ழுற்றக் கடை.
விளக்கம் : செல்வம் அழிய வேண்டிய காலம் வந்தால் அறிவாளிக்கும் மதி மயக்கம் ஏற்படும். செல்வம் வர வேண்டிய காலம் வந்தால் மூடவனுக்கும் நல்லுணர்வு ஏற்படும்.
   
குறள் எண் : 373 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் à®‰à®£à¯à®®à¯ˆ யறிவே மிகும்.
விளக்கம் : நுட்பமான பல நூல்களை முயன்று கற்றாலும் ஊழிற்கு ஏற்றவாறு அவனுடைய சொந்த அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
   
குறள் எண் : 374 இருவே றுலகத் தியற்கை திருவேறு à®¤à¯†à®³à¯à®³à®¿à®¯ ராதலும் வேறு.
விளக்கம் : ஒருவன் செல்வம் நிறைந்து காணப்படுகிறான். மற்றவன் கல்வி நிறைந்து காணப்படுகிறான். இவ்விரண்டிற்கும் விதிதான் (முன்வினை) காரணம். இது உலக இயல்பு.
   
குறள் எண் : 375 நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும் à®¨à®²à¯à®²à®µà®¾à®žà¯ செல்வஞ் செயற்கு.
விளக்கம் : விதி ஒத்திருந்தால் காலம் அல்லாத காலத்திலும் ஆக்கத்தைப் பெறலாம். விதி சதி செய்தால் சரியான காலத்திலும் அதைப் பெற முடியாது.
   
குறள் எண் : 376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் à®šà¯Šà®°à®¿à®¯à®¿à®©à¯à®®à¯ போகா தம.
விளக்கம் : விதி சாதகமாக இல்லையென்றால் காக்கப்பட்ட பொருளும் நழுவிப் போய்விடும். விதி சாதகமாக இருந்தால் காக்கப்படாத பொருளும் அழியாமல் இருக்கும்.
   
குறள் எண் : 377 வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி à®¤à¯Šà®•à¯à®¤à¯à®¤à®¾à®°à¯à®•à¯à®•à¯à®¨à¯ துய்த்த லரிது.
விளக்கம் : கோடிக்கணக்கான செல்வத்தை ஒருவன் முயன்று சேர்த்து வைத்தாலும், விதி இருந்தால் தான் அவனால் அதை அனுபவிக்க முடியும்.
   
குறள் எண் : 378 துறப்பார்மன் துப்பர வில்லார் உறற்பால à®Šà®Ÿà¯à®Ÿà®¾ கழியு மெனின்.
விளக்கம் : மேலான செல்வம் இருந்தும் தீவினைக்கு உள்ளானவர்கள் இன்பம் பெறாமல், துறவறத்தை நாடிச் செல்வர்.
   
குறள் எண் : 379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் à®…ல்லற் படுவ தெவன்.
விளக்கம் : நல்வினையால் நன்மை வரும்போது மகிழ்ச்சியடைகிறவர்கள், அது அல்லாமல் தீமை வரும் போது மட்டும் ஏன் வீணாக வருந்த வேண்டும்?
   
குறள் எண் : 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று à®šà¯‚ழினுந் தான்முந் துறும்.
விளக்கம் : விதியைப் போல் வலிவுள்ள ஒரு பொருள் உலகில் வேறு இல்லை. அவ்விதி மனிதனுடைய முயற்சிகளையெல்லாம் அழித்து, தான் ஒன்றே முடிவில் வெல்கிறது
   
குறள் எண் : 381 படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் à®‰à®Ÿà¯ˆà®¯à®¾à®©à¯ அரசரு ளேறு.
விளக்கம் : படையும், செல்வமும், கூழும் (குடிமக்கள்), அமைச்சும், நட்பும், அரணும் (கோட்டை) என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.
   
குறள் எண் : 382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் à®Žà®žà¯à®šà®¾à®®à¯ˆ வேந்தர்க் கியல்பு.
விளக்கம் : மனவுறுதி, கொடை, அறிவு, ஊக்கம் எனப்படும் நான்கு பண்புகளும் சிறிதும் குறையாதிருத்தலே அரசர்க்கு இயல்பாகும்.
   
குறள் எண் : 383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் à®¨à¯€à®™à¯à®•à®¾ நிலனான் பவர்க்கு.
விளக்கம் : நாட்டை ஆளும் அரசனுக்கு ஒரு செயலைச் செய்வதில் காலம் தாழ்த்தாமை, கல்வி, துணிவு ஆகிய மூன்றும் எப்போதும் நீங்காமல் இயல்பாக இருத்தல் வேண்டும்.
   
குறள் எண் : 384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா à®®à®¾à®© முடைய தரசு.
விளக்கம் : ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைவுபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
   
குறள் எண் : 385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த à®µà®•à¯à®¤à¯à®¤à®²à¯à®®à¯ வல்ல தரசு.
விளக்கம் : பொருள் வரும் வழிகளை உண்டாக்குவதிலும்,வரும் பொருளைச் சேமித்தலிலும், பாதுகாத்தலிலும், தக்க வழியில் செலவிடுதலிலும் வல்லதே அரசு.
   
குறள் எண் : 386 காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் à®®à¯€à®•à¯à®•à¯‚றும் மன்னன் நிலம்.
விளக்கம் : அரசன், தன்னைக் காண வருபவர்க்கு எளியனாயும், கடுஞ்சொல் பேசாதவனாயும் இருப்பானாயின் அவன் நாட்டை உலகத்தார் உயர்த்திப் புகழ்வர்.
   
குறள் எண் : 387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் à®¤à®¾à®©à¯à®•à®£à¯ டனைத்திவ் வுலகு.
விளக்கம் : இனிமையான சொல்லோடு துன்புறுவோர்க்கு வேண்டியதைக் கொடுத்துத் காப்பாற்றவல்ல அரசன் தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும்.
   
குறள் எண் : 388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு à®‡à®±à¯ˆà®¯à¯†à®©à¯à®±à¯ வைக்கப் படும்.
விளக்கம் : நீதி செலுத்தி, பகைவர் வருத்தாமல் பாதுகாத்து வரும் மன்னன் மக்களால் கடவுள் என்று சிறப்பித்து மதிக்கப்படுவான்.
   
குறள் எண் : 389 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் à®•à®µà®¿à®•à¯ˆà®•à¯à®•à¯€à®´à¯à®¤à¯ தங்கு முலகு.
விளக்கம் : அமைச்சர் முதலியோர் கூறும் உறுதிப் பொருள்கள் வெறுப்பாயிருந்தாலும் அவற்றின் பயன் கருதி அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் நற்பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகமே தங்கும்.
   
குறள் எண் : 390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் à®‰à®Ÿà¯ˆà®¯à®¾à®©à®¾à®®à¯ வேந்தர்க் கொளி.
விளக்கம் : கொடையும், இரக்க குணமும், நீதி தவறாமையும், ஏழ்மையான மக்களைக் காத்தலும் ஆகிய நான்கையும் உடைய வேந்தன் வேந்தர்க்கெல்லாம் ஒளிமிக்க விளக்காவான்.
   
குறள் எண் : 391 கற்க கசடறக் கற்பவை கற்றபின் à®¨à®¿à®±à¯à®• அதற்குத் தக.
விளக்கம் : ஒருவன் கற்றற்குரிய நூல்களை ஐயம், திரிபு, ஆகிய குற்றங்கள் நீங்கக் கற்க வேண்டும். அங்ஙனம் கற்ற பிறகு அவை கூறிய ஒழுக்க நெறியில் வழுவாது ஒழுக வேண்டும்.
   
குறள் எண் : 392 எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் à®•à®£à¯à®£à¯†à®©à¯à®ª வாழும் உயிர்க்கு.
விளக்கம் : எண் என்று சொல்லப்படுவனவும்,எழுத்து என்று சொல்லப்படுவனவுமாகிய இரண்டினையும் மக்கள் உயிர்க்குக் கண்கள் என்பர் கற்றறிந்த பெரியோர்கள்.
   
குறள் எண் : 393 கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு à®ªà¯à®£à¯à®£à¯à®Ÿà¯ˆà®¯à®°à¯ கல்லா தவர்.
விளக்கம் : கல்வி கற்றாரே உண்மையில் கண்களையுடையவர்கள் என்று உயர்த்திச் சொல்லப்படுவர். கல்லாதவர்கள் முகத்தில் புண்கள் இரண்டு உடையவராக இழித்துக் கூறப்படுவர்.
   
குறள் எண் : 394 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் à®…னைத்தே புலவர் தொழில்.
விளக்கம் : பலரும் மகிழுமாறு அவர்களுடன் கூடிப் பழகி, பின்னர் இவரை இனி எப்போது காண்போமோ என்று அவர்கள் எண்ணி ஏங்குமாறு அவர்களை விட்டுப் பிரிதலே கற்றறிந்த புலவர் தொழிலாகும்.
   
குறள் எண் : 395 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் à®•à®Ÿà¯ˆà®¯à®°à¯‡ கல்லா தவர்.
விளக்கம் : செல்வர் முன்பு வறியவர் ஏங்கி நின்று யாசித்தல் போலக் கல்வி உடையவர் முன்பு வணக்கத்தோடு பணிந்து நின்று கற்பவர்களே, உயர்ந்தவராவர். அவ்வாறு கல்லாதவர் தாழ்ந்தவரேயாவர்.
   
குறள் எண் : 396 தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் à®•à®±à¯à®±à®©à¯ˆà®¤à¯ தூறும் அறிவு.
விளக்கம் : மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணற்று நீர், தோண்டும் அளவுக்கு ஏற்பச் சுரக்கும். அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற கல்வியின் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும்.
   
குறள் எண் : 397 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் à®šà®¾à®¨à¯à®¤à¯à®£à¯ˆà®¯à¯à®™à¯ கல்லாத வாறு.
விளக்கம் : கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகும்; எந்த ஊரும் சொந்த ஊராகும். அப்படியிருக்க ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமல் இருப்பது எதனால்?
   
குறள் எண் : 398 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு à®Žà®´à¯à®®à¯ˆà®¯à¯à®®à¯ ஏமாப் புடைத்து.
விளக்கம் : ஒருவனுக்கு அவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவியோடு போகாது. ஏழு பிறவிகளிலும் தொடர்ந்து சென்று உதவும் இயல்பு உடையதாகும்.
   
குறள் எண் : 399 தாமின் புறுவது உலகின் புறக்கண்டு à®•à®¾à®®à¯à®±à¯à®µà®°à¯ கற்றறிந் தார்.
விளக்கம் : கற்றறிந்தவர் தாம் இன்பமடையக் காரணமாகிய கல்வியால், உலகத்தினரும் இன்பமடையும் சிறப்பைக் கருதி அக்கல்வியை மேலும் விரும்பிக் கற்பர்.
   
குறள் எண் : 400 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு à®®à®¾à®Ÿà®²à¯à®² மற்றை யவை.
விளக்கம் : ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியேயாகும். ஏனைய மணி, பொன் முதலிய செல்வங்கள் அழியக் கூடியன. ஆதலால் அவை செல்வங்கள் ஆகா.
கட்டுரைகள்-Articles


Top Links