Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

பாலகுமாரன்-Balakumaran

பாலகுமாரன் தமிழ்நாட்டில் வாழும் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் தமிழாசிரியர் சுலோசனா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர். தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும்கே. பாக்யராஜ்குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

Related List

Popular Products

Top Links