Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

கவிஞர்-வாலி-Vaali

கவிஞர் வாலி அவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ‘கவிஞர்’, ‘பாடலாசிரியர்’ மற்றும் ‘சிறந்த ஓவியரும்’ ஆவார். கருத்தாழமிக்க எளியத் தமிழ் சொற்களைப் பாடல்களில் அமைத்து, எல்லோருக்கும் எளிதாகப் புரியும் வகையில் தன் மனதில் பட்டதைக், கவிதை நயத்துடன் வெளிப்படுத்தும் அற்புதக் கவிஞர். தத்துவப் பாடல்களாக இருந்தாலும் சரி, விழிப்புணர்ச்சிப் பாடல்களாக இருந்தாலும் சரி, கவித்துவமானப் பாடல்களாக இருந்தாலும் சரி, காட்சிக்கேற்ப பாடல் வரிகளை எழுதி, தமிழ் திரையுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். எதுகை மோனையுடன் பாடல் வரிகளை எழுதுவதில் இவரை வெல்ல எவரும் இல்லையென்றே கூறலாம். சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டத் திரைப்படப்பாடல்களை எழுதியுள்ள இவர், ‘பொய்கால் குதிரை’, ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘ஹே ராம்’ போன்ற திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இவர் எழுதிய ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ணா விஜயம்’ போன்ற கவிதைத்தொகுப்புகள் புகழ்பெற்ற படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீரங்கத்தில் பிறந்து, எழுத்துலகில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு மற்றும் கவிதைப் படைப்புகளை விரிவாகக் காண்போம்

 

Related List

Popular Products

Top Links