Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

ஆதவன்-Adhavan

ஆதவன் 1942 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், பிள்ளைகள் சாருமதி, நீரஜா. இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தில்லியில் உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987, சூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.

மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கபட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு" என்கிற கதை ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமானது.

Related List

Popular Products

Top Links