Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

பா.ராகவன்-P-Rakavan

தரமணி மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தவர். அமுதசுரபி, தாய் போன்ற இதழ்களில் சில காலம் பணியாற்றிவிட்டு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கல்கியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். திரைப்பட விமர்சகராக நுழைந்து, 2000ஆம் ஆண்டு வரை கல்கியில் துணையாசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து 'ஜங்ஷன்' என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பாசிரியராக ஓராண்டுகாலம் பணியாற்றினார். அதன்பின் பத்திரிகைப் பணியிலிருந்து விலகி பதிப்புத்துறைக்கு வந்த இவர், தற்போது நியூ ஒரைசன் மீடியா நிறுவனத்தின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். சில தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் இவர், இப்போது திரைப்படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

 

Related List

Popular Products

Top Links