Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

Kural

குறள் எண் : 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
விளக்கம் : எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மையானது "அ" அதுபோல உலகத்துக்கு முதன்மையானவன் கடவுள்
   
குறள் எண் : 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
விளக்கம் : கடவுளின் திருவடிகளை வணங்காதவன் என்ன படித்தும் ஒரு பயனும் இல்லை
   
குறள் எண் : 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்கம் : அன்பர்களின் மனமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனது திருவடிகளைத் தம் மனத்தால் துதிக்கின்றவர் எக்காலமும் அழிவின்றி வாழ்ந்திருப்பர்.
   
குறள் எண் : 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
விளக்கம் : விருப்பும் வெறுப்பும் இல்லதவராகிய இறைவனின் திருவடிகளைத் தம் மனத்தால் நினைப்பவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படாது
   
குறள் எண் : 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
விளக்கம் : இறைவனது உண்மையான புகழை விரும்பி எப்போதும் அன்பு செலுத்துவரிடத்தில் அறியாமையால் வருகின்ற நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் சேர்வதில்லை
   
குறள் எண் : 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
விளக்கம் : ஐம்புலன் ஆசைகளையும் ஒழித்த, இறைவனது மெய்யான ஒழுக்க நெறியில் நிற்பவர் பிறப்பும் இறப்பும் இல்லாமல் நிலைத்து வாழ்வர்.
   
குறள் எண் : 7 தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
விளக்கம் : தனக்கு நிகர் இல்லாதவராகிய இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு மனத்தில் நிகழும் துன்பங்களைப் போக்கிக் கொள்ளல் இயலாது.
   
குறள் எண் : 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
விளக்கம் : அறக்கடலாக விளங்கும் ஆண்டவனின் திருவடிகளை எண்ணாதவர், அறத்திற்கு எதிரான வேறு எந்தக் கடலையும் நீந்திக் கரை சேர முடியாது
   
குறள் எண் : 9 கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
விளக்கம் : பார்க்க முடியாத கண், கேட்க முடியாத காது போல எட்டுக் குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை வணங்காதவரின் தலை இருந்தும் பயனில்லாததே
   
குறள் எண் : 10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
விளக்கம் : இறைவனடி சேர்ந்தாரே பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடப்பார். இறைவனின் திருவடிகளை நினைக்காதவர் பிறவியாகிய கடலை நீந்திக் கடக்க மாட்டாமல் அதனுள் ஆழ்வர்.
   

 

திருக்குறள் 1-100 திருக்குறள் 101-200 திருக்குறள் 201-300 திருக்குறள் 301-400
திருக்குறள் 401-500 திருக்குறள் 501-600 திருக்குறள் 601-700 திருக்குறள் 701-800
திருக்குறள் 801-900 திருக்குறள் 901-1000 திருக்குறள் 1001-1100 திருக்குறள் 1001-1200
திருக்குறள் 1201-1256      

 

 

 

 

 

Writers

Popular Products

Top Links