Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

மன்னார்-Mannar

 

 

வட மாகாணத்தின் மேற்குக் கரையோரத்தில் மன்னார் மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 2002 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அண்ணளவாக இது இலங்கையின்  பரப்பளவில்  3% ஆகும். இம் மாவட்டம் இரண்டு பிரிவாக உள்ளது. ஒரு பகுதி தீவாகவும் எஞ்சிய பகுதி  பிரதான நிலப்பரப்பாகவும் அமைந்துள்ளது. இம்மாட்டத்தின் தலை நகரமானது மன்னார் குடாவில் அமைந்துள்ள தீவில்  அமைந்துள்ளது. இம் மாவட்டத்தின் 80% மான நிலம் பிரதான நிலப்பரப்பில் காணப்படுகிறது. பிரதான நிலப்பரப்பும் தீவும் 4.5 கிலோ மீற்றர் நீளமான கடல் வீதியாலும் பாலத்தினாலும் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

நிர்வாக ரீதியாக இம் மாவட்டம் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  அப் பிரிவுகளாவன மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மற்றும் மடு  ஆகும். இம்மாவட்டத்தில் நான்கு பிரதேச  சபைகளும் ஒரு நகர சபையும் அமைந்துள்ளன.  பிரதேச சபைகளாவன மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை  மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகும் மன்னார் நகரம் நகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இம் மாவட்டம் 153 கிராம அலுவலர் பிரிவுகளையும்  587 கிராமங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது .

Writers

Popular Products

Top Links