Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

மாதகல்-Mathagal

 

 

 

இலங்கையின் வடமாகானத்தில் à®‰à®³à¯à®³ யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 16 கிலோ மீற்றர் தூரத்தில் மாதகல் கிராமம் அமைந்துள்ளது. மாதகல் கிராமத்திற்கு அருகாமையில் பண்டத்தரிப்பு, சில்லாலை, சேத்தன்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இயற்கை அன்னையின் ஆசீர்வாதம் பெற்ற ஊராக மாதகல் விளங்குவதோடு கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. இந்த ஊரை தாய் நிலமாகக் கொண்ட பலர் மருத்துவம், à®¤à®•à®µà®²à¯ தொழில்நுட்பம், பொறியியல், சட்டம் மற்றும் கணக்கியல்களில் இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.


பசுமையான நெல் வயல்கள், தலையாட்டும் பனந்தோப்பு, அழகிய தென்னை மரங்கள் என பசுமைத்தாயின் அரவணைப்பு மாத்திரம் அன்றி கடல் அன்னையின் அரவணைப்பும் இந்த கிராமத்திற்கு உண்டு. இந்த கிராமத்து மக்கள் இந்து மற்றும் கத்தோலிக்க மதங்களை பின்பற்றுபவர்களாக உள்ளதோடு விவசாயம் மற்றும் கடற்றொழில் என்பன அவர்களுடைய பிரதான தொழில்களாக விளங்குகின்றன.

 

http://www.mathagal.com/

Writers

Popular Products

Top Links