Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

நாவற்குழி-Naavatkuli

 

நாவற்குழி-Naavatkuli

ஓர் வயலும் வயல்சார்ந்த ஓர் மருத நிலமாகும். இது யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ-9 வீதியில் ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இவ்விடத்தில் இருந்து ஏ-32 நாவற்குழி - மன்னார் வீதி ஆரம்பிக்கின்றது. ஆனையிறவுப் பகுதியூடாகப் பிரயாணிக்கமுடியாது இருந்த காலத்தில் இப்பகுதியூடாகவே மக்கள் பிரயாணித்தனர். இப்பகுதியில் இலங்கை அரசாங்கம் சிங்களை மக்களைக் குடியேற்றும் வகையில் கட்டிக்கொடுக்கப்பட்ட பல வீடுகளும் காணப்படுகின்ற போதிலும் அவற்றில் சிங்களப் பொதுமக்கள் எவரும் இல்லை. இதைவிட இப்பகுதியில் மீனைப்பழுதடையாது வைத்துக்கொள்ளப் பயன்படும் பனிக்கட்டித் தொழிற்சாலையும் அமைந்துள்ளது.இப்பகுதியில் யாழ் அரச அலுவலகத்தில் உலக உணவுத் திட்டத்தின் ஊடான அனுசரணையுடன் உணவைச் செமிக்கும் களஞ்சியப்பகுதியும் காணப்படுகின்றது.

Writers

Popular Products

Top Links